நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வலியுறுத்துங்கள் – மு.அமைச்சர் ஹலீம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
மதிப்புக்குரிய செயலாளர் ஊடாக கௌரவ தலைவருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

நோன்புப் பெருநாள் கொண்டாடுதல் சம்பந்தமாக

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கடந்த காலங்களில் கடினமான பல சூழ்நிலைகளில் கூட எங்கள் சமூகத்திற்கு சரியான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளதையிட்டு பெறுமையடைகிறோம். சமூகத்தொற்று பரவியுள்ள இந்த ஆபத்தான காலகட்டத்தில் எங்களின் சமூகத்திற்கு கற்றறிந்த உலமாக்களின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அவசியம் என்பதை உணர்வதால் உங்களிடம் எனது பணிவான கோரிக்கையை விடுக்க எண்ணுகிறேன்.

சர்வதேச ரீதியில் தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையயை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து மதத்தவர்களும் தமது சமய அனுஸ்டாங்களை மட்டுப்படுத்திக்கொண்டனர். தமிழ் சிங்கள புது வருடத்தை சிங்கள் மக்களும் தமிழ் மக்களும் மிகவும் எழிமையாக குடும்பத்துடன் மாத்திரம் கொண்டாடியதை நாம் பார்த்தோம். அதேபோல், கிறிஸ்தவ மக்களும் தமது ஈஸ்டர் தின நிகழ்வையும் வீட்டுக்குள் மட்டுப்படுத்தினர். அத்துடன், எதிர்வரும் சில தினங்களில் வெசாக் நோன்மதி தினம் வருகின்ற நிலையில் பிரதமரும் மதவிவகாரம் மற்றும் புத்தசாசன அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசக் தின நிகழ்வுகளை வீட்டில் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்நிலையில், இஸ்லாத்தின் போதனைகள்களுக்கு அமைய இந்த புனிதமான மாதத்திலும் எதிர்வரும் பெருநாள் தினத்திலும் கடைபிடிக்க வேண்டிய மார்க்கவிடயங்களை முஸ்லிம்கள் தமது மட்டுப்படுத்திக்கொள்ள ஆலோசனைகள் வழங்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.

ஏற்கனவே எங்களது சமூகம் நாட்டி சமூக பொறுப்புக்கு அமைய பல தியாகங்களை கடைப்பிடித்து வருவது பாராட்டப்பட வேண்டியதாகும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளின் பேரிலும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் மற்றும் வக்பு சபையின் பணிப்புரைக்கு அமைய சமூக ஒன்றுகூடலை தவிர்த்து கூட்டுத்தொழுகைகள் மற்றும் பல சமய அனுஷ்டானங்களை தவிர்த்து வந்ததை எல்லா சமூகத்தினராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இச்சந்தர்பத்தில் நமது சமூகம் மருத்துவத்துறை அறிவுறுத்தலின் படி சமூக பொறுப்பைபேணி தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே செல்வதை தவிர்த்து தேவைப்படும் பட்சத்தில் சமூக இடைவெளியிட்டு, முகக்கவசமும் கையுறையும் அணிந்து வருதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் அறிவுறைகளை கடைபிடிப்பதுடன் ஊரடங்கு சட்டத்தை மிகப்பொறுப்புடன் கடைபிடித்து வருவதும் முக்கியமானதாகும்.

எங்கள் சமூகம் இந்த புனிதமான மாதத்திலும் எதிர்வரும் பெருநாள் காலங்களிலும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்க வேண்டுமென்று பணிவாக வேண்டுகிறேன். எதிர்வரும் நாட்களில் சமூக பொறுப்பை பேணி பெருநாள் உடைகள் வாங்குவதற்காக வெளியில் நேரத்தை கழிப்பதிலும் பெருநாளை கொண்டாடுவதற்கு ஆயத்தமாக நேரத்தை கழிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன், இந்த கஷ்டமான காலத்தில் அன்றாடம் வறுமையில் வாடும் மக்களுக்காக தனது வசதியையும் வாய்ப்பையும் செலவழிக்க அல்லாஹ் இந்த சந்தர்ப்பத்தை எங்கள் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
நன்றி

எம்.எச்.ஏ.ஹலீம் – மு.அமைச்சர்
04.05.2020

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter