உலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்திகளை Whatsappல் பெற.

WhatsApp செயலியில் WHO உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா தகவலை பெறுவது எவ்வாறு ?

கொரோனா வைரஸ் தொற்று பற்றியும், அதை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கியமான புதிய தகவல்களை வட்ஸ் அப் செயலி மூலம் வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ‘ஹெல்த் அலார்ட்டை’ ‘(WHO Health Alert ) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தகவலை வட்ஸ் அப் நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. ஹெல்த் அலார்ட்டை அணுக, குறித்த லிங்கை http://bit.ly/who-covid-19-share கிளிக் செய்யவும்.

லிங்கை கிளிக் செய்த பிறகு, வட்ஸ்அப்பைத் திறந்து, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு “ஹாய்” (Hi) என தட்டச்சு செய்ய வேண்டும் . பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் குறித்த தகவல்களை வழங்கும்.

அல்லது, வட்ஸ் அப் பயனர்கள் +41798931892 என்ற இந்த எண்ணை தங்கள் தொலைபேசியில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு, வட்ஸ் அப்பைத் திறந்து, இந்த எண்ணை எடுத்து “ஹாய்” (Hi) என தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் குறித்த தகவல்களை வழங்கும்.

இனிவரும் சில நாட்களில் அரபு, சீன, பிரஞ்சு, ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் தகவல்களை வட்ஸ்அப் வழங்கவுள்ளது.

கொவிட் 19 பற்றிய போலி செய்திகளினால் வட்ஸ் அப் பாதிக்கப்படக்கூடியது. இதனால், குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பற்றிய தகவல்களைப் பெற உலக சுகாதார ஸ்தாபனம் மிகவும் நம்பகமான ஆதாரமாகும்.

    Check Also

    வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரை ஒன்றிணைக்க திட்டம்

    பேஸ்புக் மெசஞ்சருடன் வட்ஸ்அப்பை ஒன்றிணைக்கும் புதிய திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் பரிசோதித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இவ்வாறு இணைக்கும் போது …

    Free Visitor Counters Flag Counter